நிவாரணப்பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை


Ashok| Last Modified செவ்வாய், 24 நவம்பர் 2015 (16:08 IST)
வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 
 
கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது கடலூர் மற்றும் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள சேதம் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதி என்ன ஆயிற்று. அந்த நிதியில் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தால், இந்தளவிற்கு வெள்ள சேதம் மற்றும் பாதிப்பை சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தவிர்த்திருக்கலாம் என்று தமிழக அரசை திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மேலும், தமிழகத்தில் தற்போது மேற்கொண்டு வரும் வெள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று ஸ்டாலின் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :