வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2015 (05:41 IST)

கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பு, குறைந்த விலையில் விற்பனைக்கு தயார்

தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் கூட்டுறவு அங்காடிகளில் துவரம் பருப்பு கிலோ 110 ரூபாயிக்கு விற்பனைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசு 500 டன் துவரை பருப்பு மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது.


 

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பருப்பு விலை உயர்வு உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக தமிழக அரசு குறைந்த விலையில் கூட்டுறவு அங்காடிகளில்  துவரம்பருப்பு விற்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

நவம்பர் 1 ஆம் தேதி முதல் கூட்டுறவு அங்காடிகளில் துவரம் பருப்பு கிலோ 110 ரூபாயிக்கு விற்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார் 
 
சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் உள்ள 91 கூட்டுறவு அங்காடிகள் மூலம் இந்த விற்பனையை தொடங்கள்ளது. இந்நிலையில் 500 டன் பருப்பு மத்திய அரசிடம் இருந்து தற்போது கொள்முதல் செய்துள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட துவரையை பருப்பாக மாற்றும் பணி சென்னை உள்பட பல இடங்களில் நடந்து வருகிறது.
 
சென்னையில் உள்ள 9 ஆலைகளில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு இறுதி கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து அந்த ஆலைகளில் 50 கிலோ மூட்டையாக அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. இந்த மூட்டைகளை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுரை, திருச்சி, கோவைக்கு 5 டன்னுடன் துவரம் பருப்பு மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
 
குறைந்த விலையில் துவரம் பருப்பு விற்கும் திட்டம் தொடங்க இன்னும் 3 நாட்களே இருப்பதால் கூட்டுறவுதுறை மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகள் தற்போது வேகமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.