1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Government Launches Special Vegetable Kit Worth 10 Items for Rs 100 via Cooperatives

100 ரூபாய்க்கு 10 காய்கறிகள்.. தமிழக அரசின் வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு திட்டம்...

Vetri Special Vegetable Kit
தமிழ்நாட்டில் பொதுமக்கள் பண்டிகை காலங்களை சிரமமின்றி சிறப்பாக கொண்டாடும் வகையில், கூட்டுறவுத் துறை சார்பில் ‘வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 வகையான அத்தியாவசியக் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வெறும் ரூ.100 சலுகை விலையில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
 
நாளை அதாவது நவம்பர் 5 முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சென்னையில் இயக்கப்படும் 4 நடமாடும் காய்கறி கடைகள் மூலம் இந்த சிறப்பு விற்பனை நடைபெறவுள்ளது. இந்த தொகுப்பில் பெரிய வெங்காயம் (500 கி), தக்காளி (500 கி), கத்தரிக்காய் (250 கி), உருளைக்கிழங்கு (250 கி), கேரட் (200 கி), பீன்ஸ் (200 கி), பச்சை மிளகாய் (100 கி), எலுமிச்சை (100 கி), இஞ்சி (50 கி) மற்றும் ஒரு தேங்காய் (400-450 கி) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
 
ஒரு நபருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும், நியாயமான விலையை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பையுடன் இந்த விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. அத்தியாவசியக் காய்கறிகளின் விலையைக் கட்டுப்படுத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
செனட் சபையை இழந்த டொனாட்ல் டிரம்ப் - 51 இடங்களை கைப்பற்றிய ஜனநாயக கட்சி