1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (21:29 IST)

கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியது: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கன மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது,  சென்னை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளம் முழுமையாக வடியாததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது.


 
 
வட கிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலன வீடுகளில் வெள்ளம் புகுந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல இடங்களில் பெரும் பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஒரு மாத காலத்தில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் சென்னை, கடலூர் உட்பட பகுதிகளில் 400 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வெள்ளம் முழுமையாக வடியாததாலும், பலரை காணவில்லை என அவர்களின் உறவினர்கள் தெரிவிப்பதாலும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத பலரது சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் சென்னையில் 50 வரை சடலங்கள் வரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.