வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 20 நவம்பர் 2015 (23:23 IST)

தமிழ மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்: மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை

இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற 14 மீனவர்களையும், 50 படகுகளையும் விடுதலை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலிதா, பிரமதர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக கடலோர பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்தி செல்வதும், சிறை பிடிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதுபற்றி பல முறை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
 
இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி இரவு மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் 14 பேரையும் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இலங்கை காங்கேசன்துறையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
 
இதே போல கடந்த 8 ஆம் தேதி அன்று, எந்திர பழுதால் சிக்கத்தவித்து கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். இதுபற்றி தங்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்தேன்.
 
மேலும், இலங்கை படையினரால் பிடித்து செல்லப்பட்ட 47 மீன் பிடி படகுகள் இன்னும் திருப்பிதரவில்லை.
 
பாக்ஜல சந்தியில் மீன் பிடிப்பது என்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையாகும். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்க்கை பிரச்சினையில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இது பொன்ற சூழ்நிலைகள் இனி மேலும் ஏற்பட மத்திய அரசு அனுமதிக்க கூடாது.
 
இந்த விஷயத்தில் தூதரக ரீதியாக நடவடிக்கை எடுத்து 14 மீனவர்களையும், 50 படகு களையும் விடுவிக்க உடனே விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.