வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 17 ஜூன் 2015 (01:26 IST)

அமைச்சர் ஜெயபால் காரை முற்றுகையிட்டு மீனவப் பெண்கள் போராட்டம்

தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால் காரை முற்றுகையிட்டு மீனவப் பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
கடந்த மே மாதம் 29ஆம்தேதி, சவூதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்ட பொழிக்கரையைச் சேர்ந்த மீனவர் மதிவளன் (45) கடல் கொள்ளையரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, மதிவளன் உடலுக்கு அஞ்சலி செலுத்த, தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் அதிகாரிகள் பொழிக்கரைக்கு சென்று, அஞ்சலி செலுத்தி விட்டு புறப்பட்டனர்.
 
அப்போது, சவுதியில் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்களின் பாஸ்போர்ட்டுகளை அங்குள்ள படகுகளின் முதலாளிகள் சிலர் பறித்து வைத்துள்ளனர். எனவே மீனவர்களிடம் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்து அவர்கள் நாடு திரும்ப வழி செய்யுமாறு கோரிக்கை வைத்து மீனவப்பெண்கள் சுமார் 50 பேர் அமைச்சர் ஜெயபால் காரை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களை கன்னியாகுமரி டிஎஸ்பி நந்தகுமார் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவர்கள் சமாதானம் அடைவில்லை.
 
இதனால், அமைச்சர் ஜெயபால் காரை மாற்று வழியில் திருப்பி அனுப்பினர். அதே போல அதிகாரிகளையும் பத்திரமாக அனுப்பிவைத்தனர். அமைச்சர் ஜெயபாலின் காரை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.