வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2015 (04:40 IST)

தமிழகம் வருகிறார் நிதின் கட்கரி: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி திட்டங்களை துவக்கி வைக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வருகைதர உள்ளார் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைக்க தமிழகம் வருகைதர உள்ளார். இந்த திட்டங்களைச் சுசீந்திரத்தில் துவக்கி வைக்கிறார். சுசீந்திரம் பாலத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மதுரையிலிருந்து ராமேஸ்வரம் 4 வழி சாலையைத் துவக்கி வைக்கிறார்.
 
சாலை, ரெயில் போக்குவரத்து ஆகியவற்றுக்காத்தான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாதவகையில் அவர்களுக்கு 4 மடங்கு அதிக விலை கொடுத்துதான் நிலங்களைக் கொள்முதல் செய்கிறோம்.
 
எந்த ஒரு விவசாயிக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மத்திய அரசு இதனை செயல்படுத்தும். ஏழைகளின் நிலங்களைத் தனியாருக்கும் சரி, யாருக்கும் சரி மத்திய அரசு தாரை வார்க்காது.
 
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்குத் தேவையான நிலங்களைத் தமிழக அரசு கையகப்படுத்திதர வேண்டும் என்றார்.