K.N.Vadivel|
Last Modified வெள்ளி, 5 ஜூன் 2015 (11:01 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று மதியம் தனது வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மதியம் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
அவருடன் தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், பழனியப்பன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்வதால், அதிமுகவினர் அந்த பகுதி முழுக்க குவிந்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் காவல்துறை கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.