வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2016 (10:55 IST)

விஷ மீன்களை கடலில் விடும் இலங்கை; அச்சத்தில் தமிழக மீனவர்கள்

விஷத்தன்மையுடைய சொறி மீன்களை கடலில் அதிக அளவில் விட்டு, தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


 

 
தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது, படகுகளை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வரும் இலங்கை அரசு அண்மையில் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தது.
 
அதைத்தொடர்ந்து தற்போது விஷத்தன்மையுடைய சொறி மீன்களை கடலில் அதிக அளவில் விட்டு, தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த சொறி மீன்கள் உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும் சில சமயங்களில் உயிருக்கே பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.
 
வழக்கமாக கடற்கரையில் காணப்படும் இந்த சொறி மீன்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் பகுதியில் அதிக அளவில் காணப்படுவதால் மீனவர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.