ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன்பே அராஜகம்: திமுகவினருக்கு டிடிவி கண்டனம்!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 4 மே 2021 (13:33 IST)

சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள அம்மா உணவகத்தின் வாயிலில் இருந்த பெயர் பதாகை, உள்ளே இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை திமுகவை சேர்ந்த சிலர் அடித்து நொறுக்கும் காட்சி வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திமுகவினரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் , சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.

ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது.
தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும்.என ட்விட்டரில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :