சுவாதி கொலையாளி ராம்குமார் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி: மருத்துவமனைக்கு வருகிறார் நீதிபதி
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை வெட்டிக்கொலை செய்த ராம்குமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டுவரப்பட்டார். சென்னை கொண்டுவரப்பட்ட அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் ராம்குமாரை கைது செய்ய காவல்துறை சென்ற போது தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் பிளேடால் தனது கழுத்த அறுத்துக்கொண்டார். இதனால் அவரிடம் விசாரணை நடத்தும் பணி தாமதமாகி வருகிறது.
நெல்லை அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அவர் இன்று சென்னை கொண்டு வரப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராம்குமாரை இன்று காலை 10 மணிக்கு சென்னை பெருநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டை முதலாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். ஆனால் ராயபேட்டை மருத்துவமனை மருத்துவர்கள் ராம்குமாரை பரிசோதித்து அவர் உடல் நிலை சீராக உள்ளது என்று தெரிவித்தால் மட்டுமே ராம்குமார் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார்.
ராம்குமாரின் உடல்நிலை சீராக இல்லையெனில் நீதிபதி மருத்துவமனை வந்து ராம்குமாரிடம் வாக்குமூலம் வாங்குவார் என்று கூறப்படுகிறது. சென்னை எழும்பூர் நீதிபதி இன்று மருத்துவமனைக்கு வந்து ராம்குமாரிடம் விசாரணை நடத்துவார் என கூறப்படுகிறது.