துர்காவின் பக்தியே ஸ்டாலின் வெற்றிக்கு காரணம்: எஸ்.வி.சேகர்

durga
துர்காவின் பக்தியே ஸ்டாலின் வெற்றிக்கு காரணம்: எஸ்.வி.சேகர்
siva| Last Updated: வெள்ளி, 7 மே 2021 (14:35 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று காலை தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருந்தது என்பதை பார்த்து வருகிறோம்

மேலும் இன்று காலை முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கும் போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் கண் கலங்கியது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் துர்கா ஸ்டாலின் பக்தி தான் முக ஸ்டாலின் இந்த உயரத்திற்கு வர காரணம் என எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்பதை நிரூபித்தவர் திருமதி துர்காஸ்டாலின்.ஒரு குடும்பத்தில் ஒருவர் 100% பக்தியுடன் இருந்தால் அந்தக்குடும்பத்துக்கே உயர்வு சேரும் என வெற்றியை கொண்டு சேர்த்த துர்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆசிகள்.
இதில் மேலும் படிக்கவும் :