துணை நடிகை கொலையில் காதலனுடன் கைதான தோழியின் வாக்குமூலம்!!

Sasikala| Last Modified வெள்ளி, 9 டிசம்பர் 2016 (12:30 IST)
சென்னை சாலிகிராமத்தில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி துணை நடிகை ஜெயசீலி(49) கழுத்து நெரிக்கப்பட்டு, நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

 
இந்த விசாரணைக்காக சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில், நள்ளிரவு வேளையில், ஜெயாவின் குடியிருப்புக்கு ஒரு ஆணும், பெண்ணும், ஆட்டோவில் வந்துவிட்டு சிறிது நேர்மை கழித்து திரும்பிச் சென்றது பதிவாகியிருந்தது. அதில் ஆட்டோ பதிவு எண்ணை கொண்டு அதன் உரிமையாளரான சிராஜுதினை பிடித்து விசாரித்தபோது, தனது காதலியும், துணை நடிகையுமான அசினாவுடன் சேர்ந்து ஜெயசீலியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 50 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் மாங்காட்டைச் சேர்ந்த அசீனா பேகம் (32), அவருடைய நண்பர் சிராஜூதீன் (35) ஆகியோர் சேர்ந்து ஜெயசீலியை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
 
மேலும் விசாரணையில், கொலைச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட அசினா கூறுகையில், ஜெயசீலியும், நானும் நெருங்கிய தோழிகள். சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் இருவரும் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்து அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்க்கையை கடத்தினோம். இந்நிலையில், நான் பல ஆண் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜெயசீலி வீட்டில் வந்து உல்லாசமாக இருப்பேன். அதில் கிடைக்கும் பணத்தில் ஜெயா பங்குக் கேட்டு தகராறு செய்ததால் அவள் மீது ஆத்திரமடைந்து, அவளது வீட்டில் உள்ள பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆட்டோக்காரர் சிராஜுதினை இதில் சேர்த்துக் கொண்டேன்.
 
இந்நிலையில் அடிக்கடி ஜெயா வீட்டிற்கு பலர் வந்து செல்வதால் நகை, பணத்தை கொள்ளையடித்து கொலை செய்துவிட்டால் தங்கள் மீது சந்தேகம் வராது எனக் கருதி கடந்த டிசம்பர் 2ஆம் தேதி இரவு ஜெயா வீட்டிற்குச் சென்று மது அருந்திவிட்டு, வீட்டில் இருந்து பணம், நகையை எடுத்துச் செல்ல முயன்றபோது, ஜெயா குறுக்கிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், அவளது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :