45 சவரன் நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளர்!.. வீட்டிற்கு அழைத்து பரிசு கொடுத்த ரஜினி...
சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பத்மா(48). இவர் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 11ம் தேதி இவர் பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையில் ஓரமாக ஒரு பை கிடந்ததை பார்த்தார்.. அதை எடுத்து பார்த்த போது அதில் நிறைய நகைகள் இருந்தது.. உடனடியாக அந்த பையை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பத்மா ஒப்படைத்தார்.. அதிலிருந்து நகைகள் நங்கநல்லூரில் வசிக்கும் பரமேஸ் என்பவருகு சொந்தமானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர் மேலும்.. மேலும், மொத்த நகை 45 பவுன் என சொல்லப்படுகிறது..
நகையே நேர்மையாக ஒப்படைத்த பத்மாவுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் பத்மாவை பாராட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.. அதோடு தபால் நிலையம் சார்பில் பத்மாவின் புகைப்படத்தோடு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டு அவரை கௌரவப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பத்மாவை தனது வீட்டுக்கு நேரில் அழைத்த நடிகர் ரஜினிகாந்த் அவரின் செயலை பாராட்டியதோடு அவருக்கு தங்கச் சங்கிலி பரிசாக அணிவித்தார்.. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானது..