சூப்பர் ஸ்டார் சூப்பராக உள்ளார் - சொல்கிறார் லதா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் சூப்பராக உள்ளார் - சொல்கிறார் லதா ரஜினிகாந்த்


K.N.Vadivel| Last Updated: ஞாயிறு, 19 ஜூன் 2016 (16:01 IST)
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சூப்பர் ஸ்டார் அமெரிககாவில் சூப்பராக உள்ளார் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
 
 
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார்.
 
ஆனால், அமெரிக்காவில் ரஜினி இறந்துவிட்டதாக இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்திதளம் வதந்தியை வெளியிட்டது. இது தமிழகம் தாண்டி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவரது உடல் நிலை பற்றி தொடர்ந்து வதந்திகள் பரவி வந்தன. இதனால், ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறுகையில், எனது கணவர் ரஜினிகாந்த் பற்றி வெளியான தகவல் எல்லாம் வதந்திகளே. அதை யாருமே நம்ப வேண்டாம். அவர் அமெரிக்காவில் நலமாக உள்ளார். விரைவில் சென்னை வருகிறார் என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :