கண்ணாடியை உடைத்த சிறுவன்… தந்தைக்குப் பயந்து தற்கொலை…

sinoj| Last Modified புதன், 3 ஜூன் 2020 (22:34 IST)

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெத்தேல் நகரில் வசித்து வந்தவர் பூபாலன் . இவரது மகன் தஷ்வந்த். இவர் அங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலையில் இவரது பெற்றோர் வேலைக்குச் சென்ற பின், இவரது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டில் பிரிட்ஸ் கண்ணாடியை உடைத்துவிட்டார்.

இது தந்தைக்கு தெரிந்தால் தன்னை திட்டுவார் என்ற பயத்தில்
வீட்டில் இருந்த கயிற்றை எடுத்துத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த நீலாங்கரை
போலீஸார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :