1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sudden closure of three government primary schools in Madurai due to zero enrollment

மதுரை அருகே மாணவர்கள் இல்லாததால் 3 அரசுப் பள்ளிகள் திடீர் மூடல்: கிராம மக்கள் பரபரப்பு

அரசு பள்ளி மூடல்
மதுரை மாவட்டம் சுரங்கம்பட்டி, தாதம்பட்டி மற்றும் ஓனப்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் இயங்கி வந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் திடீரென மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த அரசுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இறுதிப் கட்டத்தில் இப்பள்ளிகளில் பயின்று வந்த ஓரிரு மாணவ, மாணவிகளும் தங்களின் பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் அருகாமையில் உள்ள பிற பள்ளிகளில் சேர்ந்துவிட்டனர். இதனால், மாணவர்களே இல்லாத நிலை உருவானதை அடுத்து, கல்வித்துறையின் விதிமுறைகளின்படி இந்த மூன்று பள்ளிகளையும் தற்காலிகமாக மூட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
ஒருபுறம், அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும், காலை உணவுத் திட்டம் உள்ளிட்டப் பயனுள்ள திட்டங்களையும் தீவிரமாக செயல்படுத்தி ஆதரவளித்து வருகிறது. ஆனால், மற்றொருபுறம் இத்தகைய கிராமப்புறப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர்களும் மாணவர்களும் முன்வராதது கல்வி ஆர்வலர்களிடையே கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் மீதான விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Edited by Siva
About Writer
Webdunia