வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 20 மே 2015 (11:07 IST)

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்பிரமணியன் சாமி கோரிக்கை

நெல்லையில், தமிழக வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து, நெல்லையில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நல்ல ஆட்சி நடைபெறுகிறது. இதை தேசபக்தி ஆட்சி என்று கூட கூறலாம். மத்திய அரசு முயற்சியால் அனைத்துத் துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன.
 
நெல்லையில், புதிய ராக்கெட் ஏவுதளம் அமைய வாய்ப்பு அதிகம் உள்ளது. இது குறித்து மத்திய அரசு எனக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இங்கு ராக்கெட் தளம் அமைந்தால், அது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றாக அமையும் என நம்புகிறேன்.
 
நெல்லை வேளாண் அதிகாரியாக பணியாற்றிய முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தமிழக அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றவாளியாக உள்ளார்.
 
இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்தால் உண்மை வெளியே வராது. ஆகவே, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளியே தெரியவரும் என்றார்.