ஓட்டுநரை தாக்கிய மாணவர்கள்: ஓட்டுநர்கள் போராட்டம்

Caston| Last Modified சனி, 13 பிப்ரவரி 2016 (18:12 IST)
சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவரை, மாணவர்கள் சிலர் சரமாரியாக தாக்கினர். இதனை கண்டித்து சக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் போரட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
கிழக்கு தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றை லாசர் என்ற அரசு ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்து கிழக்கு தாம்பரம் அருகே உள்ள கிறிஸ்தவ கல்லூரி நிறுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது பேருந்தின் அருகே சென்று கொண்டிருந்த மாணவரின் பையில் உரசியவாரு சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பேருந்தை விரட்டி சென்று வழிமறித்து, ஓட்டுநர் லாசரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவல் அறிந்த சக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்தை நடுவழியில் நிறுத்தி, சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், பேருந்து ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்மந்தப்பட்ட மணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் அவர்களின் போராட்டம் கைவிடுப்பட்டன.

ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் பொறியியல் கல்லூரியை சேர்ந்த பிரவீன், கவுசிக், சோலைவர்மன் என அடையாளம் காணப்பட்டு, காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :