1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Strict Rules for Bus Drivers and Conductors: Transport Minister Issues 7 Mandatory Directives to Ensure Passenger Safety

குடிச்சிட்டு வேலைக்கு வந்தா டிஸ்மிஸ்.. டிரைவர், கண்டக்டர்களுக்கு தவெக அரசு முக்கிய உத்தரவு...

TNSTC New Rules
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் வகையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழ் பார்த்திபன் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு 7 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
 
இதன்படி, மது அருந்திவிட்டு பணிக்கு வரும் ஓட்டுநர்களின் வேலை உடனடியாக பறிக்கப்படும் என்றும், பேருந்து இயக்கும் போது செல்போன் பேசினால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், பயணிகளை நிர்ணயிக்கப்பட்ட நிறுத்தங்களில் மட்டுமே ஏற்ற இறக்க வேண்டும் என்றும், பாதி வழியில் இறக்கிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளை எப்போதும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என டிப்போ மேனேஜர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
குறிப்பாக பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் மரியாதையுடனும் கூடுதல் அக்கறையுடனும் நடந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பண்டிகை கால சிறப்பு பேருந்து ஊழியர்கள் அரசு ஒதுக்கிய ஓய்வறைகளில் மட்டுமே தங்க வேண்டும். 
 
பயணிகள் அளிக்கும் புகார்கள் மற்றும் சமூக வலைதள புகார்கள் மீது மண்டல மேலாளர்கள் உடனடியாக விசாரணை நடத்தி அதிரடி நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
குழந்தைகள் தினம்.. வெறும் கேக் மட்டுமல்ல, வாழ்த்து அட்டையும் உண்டு.. தவெக அரசு அதிரடி...