அம்மா அழைப்பு மையம் காதில் பூ சுற்றும் வேலை : கலாய்க்கும் ஸ்டாலின்


Murugan| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (12:28 IST)
அம்மா அழைப்பு மையம் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ள இந்த அழைப்பு மையத்தின் தொலைபேசி எண்கள் விசித்திரமாக உள்ளது. அவர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்த பல திட்டங்களை இதுவரை நிறைவேற்றவில்லை.  இப்போது 110 எண்ணுடன் 0 சேர்த்து 1100 என்று அம்மா அழைப்பு மையத்திற்கு தொலைபேசி எண்ணாக கொடுக்கப்பட்டுள்ளது.
 
ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்து நான்கு வருடங்களாக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. இப்போது தேர்தல் வருவதால், மக்கள் மேல் அக்கறை உள்ளவர் போல் காட்டிக்கொள்கிறார். இது மக்களை ஏமாற்றும் வேலை. 
 
அந்த தொலைபேசி எண்ணுக்கு எராளமான புகார்கள் வரும். அதற்கு பதிலளிக்க லட்சக்கணக்கான பேர்கள் வேண்டும். ஆனால் அங்கு சில ஊழியர்கள்தான் உள்ளனர். எனவே இது மக்கள் காதில் பூ சுத்துகிற வேலை. 
 
பிரச்சனைகளை மூடி மறைக்க, மக்களை திசை விருப்பும் விதமாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :