2ஜி ஊழலின் பினாமி ஸ்டாலின்: வைகோ பதிலடி

2ஜி ஊழலின் பினாமி ஸ்டாலின்: வைகோ பதிலடி


Caston| Last Modified சனி, 12 மார்ச் 2016 (13:24 IST)
வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணி அதிமுகவின் பினாமி என விமர்சித்திருந்தார் திமுக பொருளாளர் ஸ்டாலின். இவரது இந்த கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலடி கூறி தனது கண்டனத்தை கூறியுள்ளார்.

 
 
இது குறித்து பேசிய வைகோ, மேடைகளில் ஸ்டாலினைத் தான் அதிகம் விமர்சிக்கிறேன் என்றும் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்று கூறுவது தவறு. எனது எல்லா பொதுக் கூட்டங்களிலும் அதிமுகவை விமர்சித்து 30 நிமிடம் பேசுகிறேன். ஆனால் ஸ்டாலினைப் பற்றி 3 நிமிடம் மட்டுமே பேசுகிறேன் என்றார். எனது கூட்டங்களுக்கு வந்து பார்த்தால் தெரியும்.
 
நாங்கள் அதிமுகவின் பினாமி என்றால் ஸ்டாலின் 2ஜி ஊழலில் பினாமி என்று நான் சொல்லலாமா? என்றார் வைகோ. மேலும் இப்போது மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவையும், அதிமுகவையும் மக்கள் வெறுக்கிறார்கள். 1967 இல் மக்கள் முதல் முறையாக மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அது போன்ற மாற்றத்தை இப்போது கொண்டு வருவோம்.என்று  வைகோ கூறினார்.
 
அரசியலில் கொள்கை குறிக்கோள்களுடன் செயல்படும் எங்களை பற்றி பேசும்போது ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும் என்றார் வைகோ. இப்போது விஜயகாந்த் திமுகவுக்கு கதவை மூடிவிட்டதால் ஸ்டாலின் அந்த எரிச்சலில் மற்றவர்கள் மீது பாய்கிறார்.
 
சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினோம். ஏற்கனவே விஜயகாந்துக்கு நாங்கள் அழைப்பு விடுத்து இருந்தோம். இன்றைய கூட்டத்தின் மூலம் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த விஜயகாந்த் எங்களுடன் கைகோர்ப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :