செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 27 அக்டோபர் 2025 (13:11 IST)

தமிழகத்தில் SIR என்பது ஒரு சதிவேலை.. தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

தமிழகத்தில் SIR என்பது ஒரு சதிவேலை.. தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!
தமிழகத்தில் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் 'சிறப்புத் தீவிர திருத்தப் பணி' (SIR) என்பது, உழைக்கும் மக்கள், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் சதி வலை என்று தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், 2026 தேர்தலை இலக்காக கொண்டு பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டுச் சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். பீகாரில் 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டி, இத்தகைய கணக்கு தமிழகத்தில் பலிக்காது என்று உறுதியளித்தார்.
 
தி.மு.க., இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை சட்டரீதியாகவும் களத்திலும் எதிர்கொள்ளும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், இந்த சதியை முறியடிக்கவும், தொண்டர்களை விழிப்புணர்வுக் காவலர்களாக செயல்படவும் அறிவுறுத்தியும், அக்டோபர் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் 'எனது வாக்குச்சாவடி – வெற்றியின் வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் பயிற்சி மாநாடு நடைபெறும் என்றும் அறிவித்தார்.
 
அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி மழையிலும் அரசியல் இலாபம் தேடுவதாக அவர் விமர்சித்தார்.
 
Edited by Siva