1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. SSLC Supplementary Exam: Today is the Last Date to Apply Under Tatkal Scheme

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு: சிறப்பு தக்கல் முறையில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

exam
அடுத்த மாதம் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. சிறப்பு தக்கல் முறையில் இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்று என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
 
பள்ளிகளில் படித்து தோல்வியடைந்தவர்கள், தேர்வுக்கு வருகை புரியாதவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வழக்கமான தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 சிறப்பு கட்டணமாக செலுத்தி, ஆன்லைனில் தக்கல் முறையில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பித்திட இன்று ஒரு நாள் மட்டும் மீண்டும் இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 
இத்தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விண்ணப்பதாரர்கள் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விவாகரத்து வழக்குகள் அதிகரிக்க செல்போன்களே முக்கிய காரணம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கவலை!