வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (00:41 IST)

இலங்கை போர்க்குற்றம்: சர்வதேச விசாரணை கோரி தமிழகம் முழுக்க ச.ம.க. ஆர்பாட்டம்: சரத்குமார்

இலங்கை அரசின் போர்க்குற்ற செயல் மற்றும் மனித உரிமை மீறலை, சர்வதேச விசாரணை மூலம் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு ஐ.நா.சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என செப்டம்பர் 29 ஆம் தேதி, தமிழகம் முழுக்க சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
 

\
இது குறித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கையில், அந்நாட்டு ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இந்த போரில் இலங்கை ராணுவம், போர்விதிமுறைகளை மீறியும், மனித உரிமைகளை மீறியும் செயல்பட்டது. இதற்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரித்து வருகிறது.
 
இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற செயல்களை, ஐ.நா.சபை மூலம் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழக சட்ட மன்றத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டது.
 
மேலும்,சர்வதேச விசாரணை தேவை என்று, ஐ.நா. மனித உரிமை ஆணையர் தெரிவித்துள்ளதை இந்தியா வரவேற்று, இதே கருத்தை வலியுறுத்துமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் ஆதரவும் திரட்ட வேண்டும் என்று கோரி, மத்திய அரசை வலியுறுத்தி, செப்டம்பர் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.