செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (08:05 IST)

கச்சத்தீவை விட்டுக்கொடுக்க மாட்டோம்": இலங்கை அதிபர் திட்டவட்டம்

கச்சத்தீவை விட்டுக்கொடுக்க மாட்டோம்
இலங்கையின் புதிய அதிபரான அநுரகுமார திஸாநாயக்க, பதவியேற்ற பிறகு முதன்முறையாக ரோந்து கப்பலில் கச்சத்தீவுக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, "கச்சத்தீவை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது" என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
கச்சத்தீவு, இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே அடிக்கடி எல்லை தாண்டும் பிரச்சனைக்கு காரணமாக இருந்து வருகிறது. இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதி இது. ஆனால், 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்க, கச்சத்தீவை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த முக்கிய பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காண முடியாது என்பதை உணர்த்தியுள்ளார். 
 
அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி, இலங்கை அதிபரின் இந்த வருகையும், அதன் பின்னணியில் அவர் விடுத்துள்ள அறிக்கையும், இரு நாட்டு உறவுகளிலும், குறிப்பாக மீனவர் பிரச்சனை தொடர்பான விவகாரத்திலும் புதிய பதற்றத்தை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva