வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 10 டிசம்பர் 2014 (11:43 IST)

43 மீனவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மீனவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 43 மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 6 மாவட்ட மீனவர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுளள்ளனர்.
 
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த சதிஷ், சப்பிரமணியன் ஆகியோரின் 2 படகுகளில் தலா 7 பேர் என 14 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
 
இதேபோல் காரைக்கால் கோட்டுச்சேரி மேட்டில் இருந்து சுபாஷ், ராஜீவ் ஆகியோரின் 2 படகுகளில் 19 பேரும், காசாகுடிமேடு பகுதியில் இருந்து உலகநாதன் படகில் அவர் உட்பட 10 மீனவர்களும் என மொத்தம் 29 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
 
இவர்களில் 15 பேரை தவிர மற்றவர்கள் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் 5 படகுகளில் இருந்த 43 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்து படகுகளுடன் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்றர்.
 
அவர்கள் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் மீனவர்களின் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். மீனவர்களை விடுவிக்க கோரி மீனவ பஞ்சாயத்தார் மறியலில் ஈடுபட்டனர்.
 
இந்த நிலையில் நாகை, புதுக்கோட்டை, ராமேஸ்வரம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை ஆகிய 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நாகையில் நடைபெற்றது.
 
இதில் 6 மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக, இலங்கை மீனவர்கள் கடலில் சுமூகமாக மீன்பிடிப்பது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 38 பேர் மற்றும் இலங்கை கடற்படை சிறை பிடித்து வைத்துள்ள 85 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது.
 
தற்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.