1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2015 (11:01 IST)

சென்னை மழையில் பாதிப்படைந்த ஆவணங்கள் பெற சிறப்பு முகாம் : 5620 பேர் விண்ணப்பம்

கனமழையால் சேதமடைந்த ஆவணங்களை மீண்டும் பெற இலவசமாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் இதுவரை 5620 பேர் புதிய ஆவணங்களுக்காக விண்ணப்பித்துள்ளனர்.


 
 
சென்னையில் பெய்த கன மழை காரணமாக பலரின் முக்கிய ஆவணங்களான நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டா, கல்வி சான்றிதழ், கேஸ் இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம்,   ஓட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகல் சான்றிதழ்கள் ஆகியவை  சேதமடைந்தது. பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் காரணமாக, பலர் தங்களின் ஆவணங்களை பறி கொடுத்தனர். 
 
எனவே அவர்களுக்கு அந்த ஆவணங்களை கட்டணமின்றி வழங்கும் வகையில், தமிழக அரசு சென்னையில் உள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலங்களில் நேற்று முதல்(14.12.2015) முதல் 28.12.2015 வரை சிறப்பு முகாம்கள் நடத்துகிறது.
 
இந்த முகாம்களில் பலர் கலந்து கொண்டு புதிய ஆவணங்களுக்கு விண்ணப்பித்தனர். இதுவரை மொத்தம் 5620 பேர் நகல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் கோரி விண்ணப்பித்துள்ளனர்.