வெள்ளி, 7 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 25 செப்டம்பர் 2025 (17:58 IST)

திருப்பதி மற்றும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியது..!

திருப்பதி மற்றும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியது..!
வரவிருக்கும் பிரம்மோற்சவம் மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதி மற்றும் திருச்செந்தூர் கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 
திருமலை பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்காக, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், மற்றும் செங்கோட்டை ஆகிய நகரங்களிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும்.
 
அதேபோல், திருச்செந்தூர் மற்றும் குலசை கோயில்களில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, சென்னை மற்றும் கோவையில் இருந்து அக்டோபர் மாதம் வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
 
இந்தச் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளைப் பயணிகள் http://tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran