செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 24 நவம்பர் 2015 (16:48 IST)

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும்: சபாநாயகர் கடிதம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவை உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 
 
கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த விடாமல் எதிர்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தொடர் முழுவதையும் முடக்கினார். கடந்த கூட்டத்தொடரில் முக்கியமான பிரச்சனைகள் எதையும் விவாதகிக்க வில்லை. இந்நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி நடக்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடத்துவது குறித்து மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நேற்று நாடாளுமன்ற  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஜனநாயகத்தின் கோயிலாக இருக்கும் மக்களவையில் ஒழுக்கமான செயல்பாடுகளே அதன் நன்மதிப்பை நீட்டிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஏற்படும் ஒழுங்கற்ற சூழலால் அவை முடங்கும் நிலை ஏற்படுவதாகவும், இதனால் நாடு முழுவதும் அவை உறுப்பினர்கள் மீது எதிர்மறையான எண்ணம் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ள குளிர்கால கூட்டத்தொடரின் போது சகிப்பின்மை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது கடிதம் மூலம் அவை உறுப்பினர்களுக்கு கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் சபாநாயகர் மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது