1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Lenin AK
Last Updated : சனி, 4 அக்டோபர் 2014 (22:53 IST)

தீபாவளியை முன்னிட்டுச் சிறப்பு ரயில்கள் - தென்னக ரயில்வே அறிவிப்பு

தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பட்டியலைத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி தீபாவளி சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு, அக்.5 அன்று காலை தொடங்கும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
 
1. சென்னை எழும்பூர் – நெல்லை: வண்டி எண்- 06745. அக்டோபர்-27, இரவு 12.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்
 
2. சென்னை எழும்பூர் – நாகர்கோவில்: வண்டி எண்- 06351. அக்டோபர்-24,  பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். 
 
3. நாகர்கோவில் - சென்னை எழும்பூர்: வண்டி எண்- 06352. அக்டோபர்-20, மாலை 5.05 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும்.
 
4. நெல்லை - சென்னை எழும்பூர்: வண்டி எண்- 06012. அக்டோபர் 21, மாலை 6.10 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும்.
 
5. கோவை - சென்னை சென்ட்ரல்: வண்டி எண்- 06608. அக்டோபர்-21, காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.
 
6. ஈரோடு - சென்னை சென்ட்ரல்: வண்டி எண்- 06606. அக்டோபர்-20, பகல் 1.45 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும்.
 
பிரிமியம் ரெயில்கள்:
 
உயர்கட்டணச் சிறப்பு ரெயில்களையும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 
1. சென்னை எழும்பூர் – நெல்லை: வண்டி எண்- 00609.  அக்டோபர்-20, இரவு 9.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். இந்த பிரிமியம் ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
 
2. சென்னை எழும்பூர் – நாகர்கோவில்: வண்டி எண்-00611. அக்டோபர்-21, பகல் 3 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். இந்த பிரிமியம் ரெயிலுக்கான முன்பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது.
 
3. நாகர்கோவில் - சென்னை எழும்பூர்: வண்டி எண்-00632. அக்டோபர்-23, மாலை 5.05 மணிக்கு நாகர்கோலில் இருந்து புறப்படும். இந்த பிரிமியம் ரெயிலுக்கான முன்பதிவு அக்டோபர் 8ஆம் தேதி தொடங்குகிறது.
 
4. நெல்லை - சென்னை எழும்பூர்: வண்டி எண்-00672. அக்டோபர்-26, மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும். இந்த பிரிமியம் ரெயிலுக்கான முன்பதிவு அக்டோபர் 11ஆம் தேதி தொடங்குகிறது
 
5. சென்னை சென்ட்ரல் – கோவை: வண்டி எண்-00605. அக்டோபர்-20 மற்றும் 21ஆம் தேதிகளில் மாலை 9.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படுகிறது. இதற்கான முன்பதிவு, முறையே அக்டோபர் 5 மற்றும் 6ஆம் தேதி தொடங்குகிறது.