தொடர்புடைய செய்திகள்
- கைதான மாரிதாசுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்.. தொடர்ந்து விமர்சனம் செய்வாரா?
- ஒரே மாதத்தில் மின்சார துறையை சீரமைக்கும் தவெக அரசு.. இதை ஏன் 50 ஆண்டுகளில் திராவிட அரசுகள் செய்யவில்லை?
- அம்மா உணவகத்தை சரிசெஞ்சாச்சு.. அடுத்தது மழைநீர் சேமிப்பு திட்டம் தான்.. தவெக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?
- திருச்சி த.வெ.க-வில் வாரிசு போட்டி: கு.ப.கிருஷ்ணன் VS வெல்லமண்டி நடராஜன்! புஸ்ஸியின் ராஜதந்திரம்
- எதிர்க்கட்சி கூட இல்லை.. இனிமேலும் அமைதியாக இருக்க கூடாது.. யூடியூப் சேனல் தொடங்குவோம்: எடப்பாடி பழனிசாமி
பீஸ் கெரியரை திருடும் கும்பல்!.. சென்னையில் பவர் கட்டுக்கு காரணம் இதுதான்!.
கடந்த பல நாட்களாகவே சென்னையில் பல பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. பல மணி நேரங்கள் மின்வெட்டு நீடிப்பதால் கோபமடைந்த பொதுமக்கள் கூட்டமாக சென்று அந்தப் பகுதி மின்வாரிய துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதோடு சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டமும் நடத்துகிறார்கள். கடந்த 5 வருடங்களாக திமுக ஆட்சியில் இருந்தபோது இரவு நேரங்களில் ஏற்படாத மின்பட்டு தற்போது தவெக ஆட்சிக்கு வந்த பிறகு மட்டும் எப்படி நிகழ்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்
சில நாட்களுக்கு முன்பு இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த அமைச்சர் சிடி நிர்மல் குமார் மின்வாரியத் துறையில் சில கருப்பாடுகள் இருக்கின்றன. சில பிரச்சனைகள் இருக்கிறது. மின்வாரியத்திற்கு 1.50 லட்சம் பணியாளர்கள் தேவை. ஆனால், 75 ஆயிரம் பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
நேற்று இரவு கூட சென்னையில் ஆவடி பகுதியில் இரவு முழுவதும் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்தான் ஆவடி பகுதியில் உள்ள பீஸ் கெரியர்களை சில இளைஞர்கள் திருடி சென்றது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோவை அமைச்சர் நிர்மல் குமாரே தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
