ரஜினியின் அரசியல் கட்சியில் சேரும் அமைச்சர்கள் யார் யார்? பிரபல அரசியல் தலைவர் கருத்து

rajini
ரஜினியின் அரசியல் கட்சியில் சேரும் அமைச்சர்கள் யார் யார்?
Last Modified திங்கள், 17 பிப்ரவரி 2020 (20:13 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் ஆகஸ்டில் முதல் பொதுக்கூட்டத்தை நடத்துவார் என்றும் செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ரஜினியின் கட்சியில் சேர தற்போதைய அமைச்சர்கள் பலர் முன்வந்துள்ளதாகவும் இதனை அடுத்து அவரது போயஸ் கார்டன் வீட்டில் நள்ளிரவு சந்திப்புகள் பல நடைபெற்று வருவதாகவும் ஊடகமொன்று அதிரடி செய்தி வெளியாகியது

இந்த நிலையில் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் ரஜினியின் கட்சியில் சேர ஒரு சில அமைச்சர்கள் தயாராக இருப்பதாகவும் தற்போது ரஜினிக்கு ஆதரவாக பேசி வருபவர்கள் நிச்சயம் அவரது கட்சிகள் சேருவார்கள் என்றும் அதற்கான இரகசிய பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே திமுக, அதிமுக உள்பட முக்கிய கட்சிகளில் இருந்து ரஜினி கட்சியில் சேர பலர் தயாராக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஈஸ்வரன் அவர்களின் இந்த பேட்டி தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :