வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 4 பிப்ரவரி 2016 (20:06 IST)

விமானத்தில் ஏற மறுத்த 16 பயணிகள் : சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

தாமதம் காரணமாக, சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமான நிலையத்தில் ஏறாமால் போராட்டம் நடத்திய 16 பயணிகளால் இன்று சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
சென்னையிலிருந்து மலேசிய செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று மாலை 3 மணிக்கு செல்ல தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் தயாராக இருந்த நிலையில், திடீரென விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் 5.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
ஆனால் 6 மணி, 7 மணி, 8 மணிக்கு புறப்படும் என்று மாறி மாறி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் விமானம் புறப்பட்டவில்லை.
 
இதனால் கோபமடைந்த பயணிகள் விமான நிலையத்திலேயே போராட்டத்தில் குதித்தனர். அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்ய முயற்சி செய்தனர். இதற்கிடையே கோளாறு சரி செய்யப்பட்டு விமானம் புறப்படத் தயாரானது.
 
ஆனால் 16 பயணிகள் மட்டும் விமானத்தில் ஏற மறுத்தனர். குறிப்பிட்ட பணி காரணமாக மலேசியா புறப்பட்டதாகவும், தாமதமானதால் இனி அந்த வேலை நடக்காது என்பதால் விமானத்தில் ஏறவில்லை என்றும் அவர்கள் கூறினர். மேலும் விமான கட்டணத்தை திருப்பி தரும்படியும் அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். 
 
ஆனால் அவர்களின் லக்கேஜ்களை விமானத்தில் ஏற்றிவிட்டதாகவும், அதை எடுப்பது கடினம் என்று அதிகாரிகள் கூறினர். இதற்கிடையில் விமானத்தில் ஏறியவர்களும் விமானத்தை எடுக்கச்சொல்லி போராட்டத்தில் குதித்தனர்.
 
இதனால் வேறு வழியின்றி, அந்த 16 பேர்களின் லக்கேஜ்களை விமானத்திலிருந்து இறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். மேலும் விமானக் கட்டணத்தையும் திருப்பி தருவதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  இறுதியில் அந்த விமானம், இரவு 9.50 மணிக்கு மலேசியா புறப்பட்டுச் சென்றது.