தொடர்புடைய செய்திகள்
- திருச்சி கிழக்கில் த்ரிஷா போட்டியா? ஜெயித்தால் அமைச்சர் ஆவாரா?
- தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்திருந்தால் 30-40 எம்.எல்.ஏ கிடைச்சிருக்கும்.. ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை செய்த வேலை..
- விஜய்க்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் காங்கிரஸ் ஆதரவு தருமா? பரபரப்பு தகவல்..!
- தொங்கு சட்டசபையை நோக்கி நகரும் தமிழகம்.. தவெக ஆட்சி அமைக்க யார் யார் ஆதரவு கொடுப்பார்கள்?
- 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றால் ஒரு தொகுதியின் தேர்தல் செலவை ஏற்க வேண்டுமா? சென்னை ஐகோர்ட்
தவெக வேட்பாளர் பிரபு வாங்கிய ஓட்டில் 4ல் 1 பகுதி கூட சீமான் வாங்கவில்லை.. 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட பரிதாபம்..!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காரைக்குடி தொகுதியின் வாக்கு விபரங்களை ஆராயும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி எந்தளவிற்கு மற்ற கட்சிகளை பாதித்துள்ளது என்பது தெளிவாகிறது.
இத்தொகுதியில் தவெக வேட்பாளர் பிரபு 34,782 வாக்குகள் பெற்று முதலிடத்தில் மாஸ் காட்டியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 19,614 வாக்குகளுடனும், அமமுக-வின் தேர்போகி பாண்டி 8,920 வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். ஆனால், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட சீமான் வெறும் 7,625 வாக்குகளை மட்டுமே பெற்று 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
தவெக வேட்பாளர் பிரபு வாங்கிய வாக்குகளில் நான்கில் ஒரு பகுதியை கூட சீமானால் நெருங்க முடியவில்லை என்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றத்திற்கான அரசியலை பேசி வந்த சீமானின் வாக்கு வங்கியை விஜய் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்துள்ளதையே இந்த எண்கள் காட்டுகின்றன.
தவெக-வின் இந்த அசுர வேக வளர்ச்சி, நாம் தமிழர் கட்சியின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது.
காரைக்குடி தொகுதியின் நிலவரம்:
பிரபு தவெக: 34782
மாங்குடி காங்கிரஸ்: 19614
தேர்போகி பாண்டி அமமுக: 8920
சீமான் நாதக: 7625
Edited by Siva
