கணவர் மீது பாலியல் புகார்: மனமுடைந்த மனைவி தற்கொலை


Suresh| Last Updated: திங்கள், 30 நவம்பர் 2015 (11:24 IST)
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுயில், தனது கணவர் மீது எழுந்த பாலியல் புகார் காரணமாக மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

 

 
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் தொழிற்பேட்டையைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி பால்கனி 39 வயதுடைய பால்கனி அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்து வந்தார்.
 
நிலம், வாங்கி விற்கும் தரகராக பூமிநாதன் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், பூமிநாதன்ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
 
இது குறித்து அரியமங்கலம் காவல்துறையிர் பூமிநாதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
 
இதனால் மனமுடைந்த பூமிநாதனின் மனைவி பால்கனி, அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தில் விஷத்தை குடித்துள்ளார்.
 
இதனால், மயங்கிக் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொணடுசெல்லும் வழியிலேயே பால்கனி உயிரிழந்தார்.
 
இது குறித்து அரியமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பால்கனி காவல்துறையினருக்கு எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.
 
அந்த கடிதத்தில், "தனது கணவர் கைது செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது கணவர் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்" குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :