Murugan|
Last Modified புதன், 3 ஆகஸ்ட் 2016 (18:33 IST)
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த மலத்தான்குலம் கிராமத்தை சேர்ந்த சகாதேவன் மகன் முத்துகருப்பு(7). அந்த சிறுவன் கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு முத்துகருப்பு வருகை தந்துள்ளான். அப்போது அச்சிறுவனின் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுமார் 11 மணியளவில் சிறுவனின் மூக்கில் ரத்தம் வழிந்தும்,வயிறு உப்பிய நிலையில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டான். பின்னர் பள்ளி நிர்வாகம் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.
ஆனால் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த பெற்றோர்களும், உறவினர்களும், மாணவன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்...
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.