செப்.28: 29 அமைப்புகள் சார்பில் சென்னையில் அமெரிக்க தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம்


K.N.Vadivel| Last Updated: சனி, 26 செப்டம்பர் 2015 (02:12 IST)
ஐநா மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக அமெரிக்க அரசு கொண்டு வரும் தீர்மானத்தை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை  மதிமுக உள்ளிட்ட 29 அமைப்புகள் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர்.
 
 
ஐநா மனித உரிமை மன்றத்தில், இலங்கையில், தமிழர் இனப்படுகொலையை மறைத்து, இலங்கை அரசு விசாரணைக்கு உதவும் வகையில், அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டுவருவதைக் கண்டித்து, மதிமுக மற்றும் விசிக உள்ளடிட்ட 29  அமைப்புகள் சார்பில், செப்டம்பர் 28ஆம் தேதி அன்று, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர்.
 
இதற்கான அறிவிப்பை, மதிமுக பொதுச்செயலர் வைகோ, மனித நேய மக்கள் கட்சித் துணைத் தலைவர் குணங்குடி அனீஃபா, வழக்கறிஞர் அங்கயற்கண்ணி ஆகியோர்  சென்னையில் இன்று வெளியிட்டனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :