கொரோனா ஆலோசனை குழுவில் இருந்து மூத்த விஞ்ஞானி விலகல்! – காரணம் என்ன?

Shahid Jameel
Prasanth Karthick| Last Modified திங்கள், 17 மே 2021 (14:56 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசுக்கு கொரோனா ஆலோசனை வழங்கும் குழுவில் இருந்து மூத்த விஞ்ஞானி விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் கொரோனா நோயாளிகள் பெரும் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் கொரோனா ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த விஞ்ஞானி ஷாஹித் ஜமீல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக கொரோனா இரண்டாம் அலை அதிகளவில் பரவ தேர்தல் நடத்தப்பட்டதும், கும்பமேளாவும் தான் முக்கிய காரணம் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :