பாமகவில் இருந்து விலக தயார்: ஜி.கே. மணி பரபரப்பு அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணி, கட்சியில் இருந்து விலக தயாராக இருப்பதாக சென்னையில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
ஜி.கே. மணி இதுகுறித்து மேலும் பேசுகையில், அன்புமணி தன்னை ராமதாஸிடமிருந்து பிரித்து விட்டதாக கூறியது வேதனை அளிப்பதாக குறிப்பிட்டார். "நான் அன்புமணிக்கு எந்தவித துரோகமும் செய்ததில்லை. மத்திய அமைச்சர் பதவி பெற்று தர நான் தான் ராமதாஸிடம் பேசினேன்" என்றும் அவர் விளக்கினார்.
பாமக தேர்தல் களத்தில் பலமான கட்சியாக இருக்க வேண்டுமானால், ராமதாஸும் அன்புமணியும் ஒன்று சேர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அன்புமணி, துரோகிகள் இருக்கும் வரை இணைய மாட்டேன் என்று கூறினால், யாரெல்லாம் துரோகிகள் என்று கூறுங்கள், நாங்கள் வெளியேறிவிடுகிறோம். ராமதாஸும் அன்புமணியும் ஒன்று சேருவதற்காக நானும் எனது குடும்பத்தினரும் கட்சியை விட்டு விலக தயாராக இருக்கிறோம்.
எனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜிநாமா செய்ய தயார் என்றும், தனக்கு பாமகவின் எதிர்காலமே முக்கியம் என்றும் ஜி.கே. மணி பரபரப்புடன் தெரிவித்தார்.
Edited by Mahendran