புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 நவம்பர் 2025 (17:20 IST)

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

sengottaiyan
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று  சட்டமன்ற தலைவர் அப்பாவுவைச் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கையோடு, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு செங்கோட்டையன் வருகைதந்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
அ.தி.மு.க.வின் கொங்கு மண்டல வாக்குகளை கவருவதில் முக்கியமானவராக அறியப்படும் செங்கோட்டையன், நாளை காலை அதிகாரப்பூர்வமாக த.வெ.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க ஆரம்பித்தது முதல் கட்சியில் இருந்தவரும், ஒரே தொகுதியில் அதிக முறை வென்றவருமான செங்கோட்டையன், கட்சி ஒருங்கிணைப்பு குறித்து பேசியதால் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டார்.
 
த.வெ.க.வில் மூத்த அரசியல் தலைவர்கள் இல்லாத நிலையில், செங்கோட்டையனின் வருகை, அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்குகளை உடைத்து, த.வெ.க.வுக்கு கூடுதல் அரசியல் பலத்தை சேர்க்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Mahendran