செம்மரம் வெட்டியதாக 11 தமிழர்கள் கைது: திருப்பதி சிறையில் அடைப்பு


Suresh| Last Updated: செவ்வாய், 15 மார்ச் 2016 (07:39 IST)
திருப்பதி அருகே செம்மரம் வெட்டியதாக 11 தமிழர்கள் உட்பட 12 பேரை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 
ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்துள்ள ரங்கம் பேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக கூலி தொழிலாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
அவர்களிடம் இருந்து 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள 11 செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கைது செய்யப்பட்டவர்கள், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
 
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்த 5 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரையை சேர்ந்த 6 பேரும், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  ஒருவர் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டனர் இது குறித்து தொடர்ந்து சிசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.


இதில் மேலும் படிக்கவும் :