செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு சிறப்பு பரிசு


K.N.Vadivel| Last Modified வெள்ளி, 13 நவம்பர் 2015 (02:31 IST)
செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும்  பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் ஆகிய இரு திட்டங்களில் சேரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
இது குறித்து, சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தபால் நிலையங்களில் ஏற்கனவே மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ல செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும்  பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டம் ஆகிய இரு திட்டங்களில் சேரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த திட்டங்களில் சேரும் குழந்தைகளுக்கு, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் உருவம் பொறித்த தபால் கவரும், கடந்த சில தினங்களுக்கு முன்பு, வெளியிடப்பட்ட அவரின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையும், மேலும், அப்துல்கலாமின் வரலாறு அடங்கிய கையேடும் சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
 
இந்த பரிசு சென்னை மண்டலத்துக்குட்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :