புதிய அமைச்சரவைக்கு என முதல் கோரிக்கை: இயக்குனர் சீனுராமசாமி

seenu
புதிய அமைச்சரவைக்கு என முதல் கோரிக்கை: இயக்குனர் சீனுராமசாமி
siva| Last Updated: வெள்ளி, 7 மே 2021 (15:41 IST)
தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டார் என்பதும் அதனை தொடர்ந்து அவர் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் பணிகளையும் தொடங்கினார் என்பதையும் பார்த்தோம்

முதலமைச்சராக அவர் முக்கிய 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் என்றும் அவற்றில் ஒன்று மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் என்றும் அறிவிக்கப்பட்டதை பார்த்தோம். இந்த நிலையில் முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ளார் முக ஸ்டாலின் அவர்களிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்

குறிப்பாக திரையுலகினர் அடுக்கடுக்காக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் திரையுலகின் இயக்குனர்களில் ஒருவரான சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கம் மூலம் புதிய அமைச்சரவைக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
தந்தைக்கும் அவர் முதல்வராக உழைத்த தனயனுக்கும் நல்வாழ்த்துகள். இப்பேரிடர் காலத்தை மக்கள் விழிப்புணர்வோடு கடக்க தடுப்பூசியின் மூலம் இந்நோய் காலத்தை முறியடிக்க புதிய அமைச்சரவை வழிவகுக்கும் என்ற விண்ணப்பதை முன் வைக்கிறேன்.
இதில் மேலும் படிக்கவும் :