செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 ஜூன் 2025 (11:00 IST)

பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டம்.. மரம் ஏறி பயிற்சி பெறும் சீமான்..!

Seeman
ஜூன் 15ஆம் தேதி பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சீமான் பனைமரம் ஏறி பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்செந்தூர் அருகே வரும் 15ஆம் தேதி நடைபெறும் இந்த கள் இறக்கம் போராட்டம், தமிழக பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கல் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க உள்ளார்.
 
இது குறித்து சீமான் கூறுகையில், "ரஷ்யாவில் தமிழனின் பனைச்சாறு  மூலிகைகள் எனக் கூறி விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் கள்ளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவேதான் நானே பனைமரம் ஏறி கள் இறக்கப் போராட்டத்தை தொடங்க இருக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார். 
 
திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போராட்டம் நடைபெற இருக்கும் நிலையில், சீமான் பனைமரம் ஏறி பயிற்சி பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
 
"பனை மரத்தில் ஏற வேண்டாம்," என அவரது கட்சியினர் கூறியபோதிலும், "இந்த போராட்டத்தில் நான் பங்கேற்பதால் பனைமரம் ஏறுவேன், யாரும் பயப்பட வேண்டாம்," என்று அவர் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran