செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 செப்டம்பர் 2025 (17:48 IST)

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான் கேலி

விஜய் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல, வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: சீமான் கேலி
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜய் தனது பரப்புரையில் சிங்கம் என பேசியது குறித்து கருத்தை கேலியாக குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மக்கள் மத்தியில் நிற்பவன், மக்களுக்காக போராடுபவன் தான் மக்களை சந்திப்பவன் தான் உண்மையான அரசியல் தலைவன். ரோடு ஷோ நடத்துவதும், கூட்டத்தை கூட்டிவிட்டு பேசுவதும் மக்களை சந்திப்பது ஆகாது. மக்களின் பிரச்சனைகளுக்காக மக்களோடு நிற்பதுதான் உண்மையான சந்திப்பு" என்று அவர் கூறினார்.
 
மேலும், விஜய் தன்னை "வேட்டையாட வரும் சிங்கம்" என்று குறிப்பிட்டதற்கு பதிலளித்த சீமான், "அவர் வேட்டையாட வரும் சிங்கம் அல்ல; வேடிக்கை காட்ட வரும் சிங்கம்" என்று விமர்சித்தார்.
 
இந்த கருத்து, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran