சீமானை மறைமுகமாக தாக்கிப் பேசிய கருணாஸ் ! அரசியலில் பரபரப்பு

karunas
சினோஜ் கியான்| Last Updated: வியாழன், 17 அக்டோபர் 2019 (15:25 IST)
பிரபல நடிகரும்  இசையமைப்பாளருமான   கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ,  அந்த தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வெற்றிபெற்றார்.
அதையடுத்து அரசியலில் சில முரண்பட்ட கருத்துகளை ஆளும் கட்சிக்கு எதிரான முன்வைத்து சர்ச்சையில் சிக்கினார்.அவர் மீது பல வழக்குகள் பாய்ந்தன. அதன்பிறகு ஆளும் கட்சினருடன் இணைந்து சுமூகமாகச் செயல்பட்டுவருகிறார்.
 
இந்நிலையில், எம்.எல்.ஏ கருணாஸ் இன்று ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், விடுதலைப்புலிகளின் தலைவர்  பிரபாகரனுடன் இணைந்து புகைப்படம்  எடுத்ததால் அனைத்தையும் முன்னின்று நடத்தியதாக சிலர் பேசிவருகிறார்கள்.  இலங்கைக்கு முற்றிலும் சம்மந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறுவதுதான் எனக்கு  ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்திருக்கிறார்.
 
கருணாஸ் நீண்ட காலத்திற்கு பிறகு தனது அரசியல் கருத்தை தெரிவித்துள்ளார். அதில் பேசியிருப்பது முற்றிலும் சீமானைக் குறிப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
 
சமீபத்தில், விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, விடுதலைப்புலிகள் கொலை செய்தது சரிதான் என்று பேசினார்.

இது சர்சையாகி  இவரது பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்களிடம் இருந்தும், நாடு முழுவதிலும் இருந்து,  எதிர்ப்புகள் வலுத்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் இன்று கருணாஸ் தெரிவித்துள்ள கருத்தும் சீமானை மறைமுகமாக தாக்குதாகவே பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
 
சீமானும் கருணாஸும் ஒரே   கலைத்துறையில் இருந்தாலும் அரசியல் ரீதியிலாக தனித்தே காணப்படுகிறார்கள். எனவே ஆளுங்கட்சிக்கு ஆதரவளிப்பதுபோல் எம்.எல்.ஏ  கருணாஸ், சீமானை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :