வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 18 மே 2016 (15:41 IST)

குமரியில் கடல் சீற்றம்: சாலைகள் துண்டிப்பு, வீடுகளுக்குள் புகுந்தது தண்ணீர்

வங்க கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 3 நாட்களாக குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


 
 
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கடல் சீற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல அடி உயரத்துக்கு எழுந்த கடல் அலைகள் தடுப்புகளையும் தாண்டி ஊருக்குள் புகுந்தன. இரவு முழுவதும் கடல் பயங்கர சீற்றத்துடன் இருந்தது.
 
பல அடி உயரத்துக்கு எழுந்த கடல் அலைகள் தடுப்புகளை தாண்டி ஊருக்குள் புகுந்து சாலைகளை துண்டித்தன. தேங்காய்ப்பட்டணம், இணையம் பகுதி கடலோர சாலைகள் கடலரிப்பால் துண்டிக்கப்பட்டன.
 
தூத்தூர், சின்னத்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை பகுதிகளில் கடலரிப்பு காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் உள்ள மக்கள் பத்திரமான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் கடல் சீற்ற பகுதிகளை பார்வையிட்டு, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.