வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : புதன், 18 நவம்பர் 2015 (17:44 IST)

சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு 22ஆம் தேதி வரை விடுமுறை

தீவிரமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 22 ஆம் தேதி (ஞாயிறு) வரை விடுமுறை  என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.


 
 
காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரா நோக்கிச் செல்ல உள்ளதால் சென்னையில் 22 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 22 ஆம் தேதி (ஞாயிறு) வரை விடுமுறை என்று அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். மேலும் ரும் 23 தேதி முதல் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இதே போல், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 22 ஆம் தேதி வரை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்

தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யா வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
 
புதுச்சேசி, கடலோர மாவட்டம், வடமாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் காணப்படும் மேலடுக்கு சுழற்சியால் தற்போதைக்கு தமிழகத்திற்கு புயல் அபாயம் இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.