புதுவையில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு: அதிரடி உத்தரவு

lockdown
புதுவையில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு:
siva| Last Updated: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (21:38 IST)
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
இதனை அடுத்து வெள்ளி இரவு முதல் திங்கள் அதிகாலை வரை ஒவ்வொரு வாரமும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திங்கள் முதல் சனி வரையிலான கால கட்டத்தில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு இருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் புதுச்சேரியில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஊர்வலங்கள் தேரோட்டம் நடத்த தடை என்றும் உணவு விடுதிகள் பகல் 2 மணி வரை இயங்கும் என்றும் பின்னர் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் முழு ஊரடங்கு என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதில் மேலும் படிக்கவும் :